மருத்துவ நிர்வாகத் துறையில் முதுகலை டிப்ளமோ | Kalvimalar - News

மருத்துவ நிர்வாகத் துறையில் முதுகலை டிப்ளமோ

எழுத்தின் அளவு :

மெட் பல்கலைக்கழகமும் அப்போலோ மருத்துவக் கல்வி நிறுவனமும் இணைந்து ஆன்லைன் முறையில் பி.ஜி.டி.எச்.ஏ. படிப்பினை வழங்குகின்றன. இந்த ஆன்லைன் டிப்ளமோ படிப்பில், பிரின்ஸ்பல் ஆப் மேனேஜ்மென்ட், ஹெல்த் அன்ட் ஹாஸ்பிடல் எகனாமிக்ஸ், அக்கவுன்டிங் பார் ஹாஸ்பிடல்ஸ், மார்க்கெட்டிங் ஆப் ஹெல்த் சர்வீஸ் உட்பட பல்வேறு துறைகள் பற்றி கற்பிக்கப்படுகிறது. ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் முதுகலை டிப்ளமோ (பி.ஜி.டி.எச்.ஏ.) ஒரு வருட காலப்படிப்பாகும். இதில் இரண்டு வாரங்கள் மட்டும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஹைதராபாத், டெல்லி, சென்னை, புனே, கோல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இந்த நேரடி வகுப்புகளில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கட்டாயமாக மூன்று பயிற்சி தேர்வுகளில் பங்கேற்றிருப்பதும் அவசியமாகும். இந்த பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்துக்கொள்வதால் மாணவர்களுக்கு மருத்துவ துறையில் தகுந்த அனுபவம் பெற நல்ல வாய்ப்பாக அமைகிறது. நேரடியாகவும் குழு கலந்துரையாடல் மூலமும் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் இந்த பயிற்சி வகுப்புகள் உதவி புரிகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மருத்துவத் துறையில் அலோபதி, பல் மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யூனானி, பிசியோதெரபி, பாராமெடிக்கல் போன்ற துறைகளில் அங்கீகாரம் பெற்ற பல்கலையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வழங்கப்படும் இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் சீடிக்கள் அளிக்கப்படுகிறது. இந்த படிப்பு 4 பாட மாதிரிகளைக் கொண்ட அசைன்மென்ட், நேரடி வகுப்புகள், செய்முறை திட்டம், இறுதித் தேர்வு என நான்கு முறைகளில் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் 50 விழுக்காடு மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இப்படிப்பினை முடித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் நோயாளிகள் பராமரிப்புப் பிரிவு, பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பு மையம், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு, தர மேலாண்மைப் பிரிவு போன்ற துறைகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us