சென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

சென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? ஏப்ரல் 27,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

மார்க்கெட் ரிசர்ச் துறையானது மேனேஜ்மென்ட் பிரிவுகளில் ஒன்று. உலக மயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்தத் துறைக்கான மவுசு கூடிக் கொண்டே வருகிறது. எனவே இதில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், நுகர்வோர் எந்த மாதியான பொருட்களை விரும்புகிறார்கள் என ஆய்வு செய்த பின் அதற்கேற்ப வடிவம், சுவை, மணம், பேக்கிங், எடை போன்றவற்றை முடிவு செய்கிறார்கள் என்பதை சந்தை ஆய்வு முடிவு செய்ய உதவுகிறது.


எப்படி வினியோகப்படுத்தலாம் போன்ற முக்கிய முடிவுகளையும் இது எடுக்க உதவுகிறது. உற்பத்தி மட்டும் என்றில்லாமல், கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் ஆய்வுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இது டிவி போன்ற மீடியாவுக்கும் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள் என அறிய உதவுகிறது.

 

இதில் பின்வரும் பணிகள் உள்ளன
* ஆய்வுப் பணி
* களப் பணி
* ஆய்வு மற்றும் தொகுப்புப் பணி


எம்.பி.ஏ, மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் மற்றும் இதில் பிஜி டிப்ளமோ படித்திருப்போர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்கள். எந்த மாதிரியான கேள்விகளைக் கொண்டு என்ன பதிலைப் பெற முடியும் என்பது இவர்களுடைய உத்தியாக இருக்கும். 

 

ஆய்வு மற்றும் தொகுப்புப் பணிகளை செய்பவர்கள், பெறப்படும் புள்ளி விபரங்களைக் கொண்டு ஆய்வு செய்து முடிவுகளை வரையறுத்துக் கொடுப்பவர்கள். சோஷியாலஜி, சைகாலஜி ஆகியவற்றில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்திருப்போர் இந்தப் பணிகளைச் செய்ய முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us