பி.எஸ்சி., கணினி வழி வரைபடக் கல்வியை (சிஏடி) | Kalvimalar - News

பி.எஸ்சி., கணினி வழி வரைபடக் கல்வியை (சிஏடி)

எழுத்தின் அளவு :

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் பி.எஸ்சி. கணினி வழி வரைபடக் கல்வியை (சிஏடி) அறிமுகப்படுத்தியுள்ளது. வடிவமைப்பாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் நிலையில், வடிவமைப்பு பயிற்சி அளிக்கும் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் சென்னை வின்சா சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் அடிப்படையில் 3 ஆண்டுகளைக் கொண்ட பி.எஸ்சி. சிஏடி (கம்ப்யூட்டர் எய்டட் டிசைன்) இளங்கலை படிப்பு துவக்கப்படுகிறது. பி.எஸ்சி., சிஏடி படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us