தற்போது பாங்க் ஒன்றின் கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். பி.காம்., படித்திருக்கிறேன். இந்த நேர்முகத் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?ஏப்ரல் 13,2010,00:00 IST
பொதுவாக பாங்க் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ளச் செல்வோர் பாங்கிங் துறையின் அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்தியாவில் பாங்கிங் துறையானது செயல்படும் விதம், எவை பொதுத் துறை பாங்குகள், எவை தனியார் துறை பாங்குகள், பிற பாங்குகள் என்ன போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். பி.காம்., பி.ஏ., பொருளாதாரம் போன்ற தகுதிகளைப்
பெற்றவருக்கு பாங்கிங் துறையிலிருந்து கொஞ்சம் ஆழமான கேள்விகள் கேட்கப்படலாம்.
அடுத்ததாக நீங்கள் படித்திருக்கும் பட்டப்படிப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்(நீங்கள் பி.காம்., என்பதால் இது காமர்ஸ்/அக்கவுன்டன்சி/பாங்கிங் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமையலாம்). எந்தப் பணிக்குச் செல்வோரிடமும் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமானது பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகளிலிருந்து கேட்கப்படும் கேள்விகள். இவற்றுக்கு நேர்முகத் தேர்வு அழைப்பு வந்தபின் தயாராக முடியாது. செய்தித்தாள் வாசிப்பது மிக அவசியம். மேலும் ஜி.கே.டுடே போன்ற பொது அறிவு மாதப் பத்திரிகைகளையும் கட்டாயம் தொடர்ந்து படிக்க வேண்டும்.