பில்டிங் சர்வீசஸ் இன்ஜினியரிங் | Kalvimalar - News

பில்டிங் சர்வீசஸ் இன்ஜினியரிங்

எழுத்தின் அளவு :

இன்றைய கட்டுமான துறைக்கு பயன்படும் நவீன தொழில்நுட்பங்கள், வடிவமைக்கும் முறைகள் குறித்த அனுபவ பயிற்சியுடன் கூடிய கல்வியை வழங்குவதே பில்டிங் சர்வீசஸ் இன்ஜினியரிங். இதில் முதுகலை படிப்பில் பில்டிங் டெக்னாலஜி, லைட்டிங் அப்ளிக்கேஷன், சஸ்டெய்னபிள் டெக்னாலஜி, பெர்சனல் டெக்னாலஜி, பைப்டு டிஸ்டிரிபிஷன், இன்டிவிஜுவல் புராஜக்ட், ஹெல்த் அண்டு சேப்டி, இன்டகரேட்டட் பில்டிங் சர்வீசஸ் டிசைன், ஏர் கண்டிஷனிங், மேதமெடிக்ஸ் பார் இன்ஜினியர்ஸ், அட்வான்ஸ்டு பில்டிங் சர்வீசஸ் அண்டு டெக்னாலஜீஸ், டிசைன் அண்டு புரடக்ஷன் கம்ப்யூட்டர் அனாலிசிஸ், கன்ஸ்டிரக்ஷன் லா, மானேஜ்மென்ட் ஸ்கில்ஸ், எகானாமிக்ஸ் அண்டு பைனான்ஸ் போன்ற பிரிவுகளில் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. உலகலாவிய தேவைக்கு ஏற்ப இன்ஜினியரிங் மற்றும் நிர்வாக திறன் மிக்க இன்ஜினியரிங் மேனேஜர்களை உருவாக்கும் விதத்தில் இந்த முதுகலை படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இவர்களால் கட்டுமான பணிகளில் ஏற்படும் பிரச்னைகளை எளிதாக கையாள முடியும். கட்டடங்களை திட்டமிடும் போதே மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில், புவிவெப்பமடைதல், தட்பவெப்ப மாறுபாடுகளை சமாளிக்கும் வகையிலும் வடிவமைக்கின்றனர். இதனால் கட்டுமான திட்டக்குழுவில் பில்டிங் சர்வீசஸ் இன்ஜினியர்களின் பணி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us