பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் நீங்கள் உங்களது படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிக்கும் அதே சமயம் உங்களது பாடங்களில் சிறப்புத் திறன் பெற்று நன்கு புரிந்து படிப்பது மிக முக்கியம். மேலும் டேலி, ஆரக்கிள், விசுவல் பேசிக் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் சிறப்பாக திறன் பெறுவதும் முக்கியம். இவற்றை விட மிக முக்கியமானது பி.காம்., படிப்புடன் ஏ.சி.எஸ்., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., போன்ற கூடுதல் தகுதி பெறுவதாகும். சிறப்புத் தகுதி தரும் ரிஸ்க் மேனேஜ் மென்ட், இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட், பினான்சியல் மேனேஜ்மென்ட் போன்றவற்றில் கூடுதல் தகுதி பெற முயற்சிப்பதும் பலன் தரும்.