மருத்துவம், பயோகெமிஸ்ட்ரி, ஜெனிடிக்ஸ், மாலிகூலர் பயாலஜி, எகாலஜி போன்ற துறைகளில் அதிகம் பயன்படும் மைக்ரோபயாலஜி படிப்பானது தற்போது மிகவும் பிரகாசமான வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது. வெறும் பட்டப்படிப்பு முடிப்பவரை விட அதில் பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கே வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன.
மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற தகுதி பெறுபவர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. இரவு பகல் பாராமல் உழைக்கும் மனப்பாங்கு உடையவராகவும் எதையும் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்பவராகவும் அடிப்படையில் குண நலன் உடையவருக்கு இந்தத் துறை மிகவும் பொருந்தும். பெரிய நவீன மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றில் இதை முடிப்பவர்கள் வேலை பார்க்கலாம். மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள், உணவுப் பொருள் உற்பத்தி கூடங்கள், குடிநீர் பதப்படுத்தும் நிறுவனங்கள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.