வெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா? குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா? | Kalvimalar - News

வெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா? குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா? மார்ச் 08,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

 

இது நமது இளைஞர்களை யோசிக்கச் செய்யும் ஒரு கேள்வியாக உள்ளது. நம் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்கென்று குழு குழுவாக உட்கார்ந்து தயாராகும் நபர்கள் ஊருக்கு ஊர் அதிகரித்து வருகின்றனர். பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் தொடங்கி படிப்பு முடித்த மிகச் சில ஆண்டுகளுக்குள் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு வாய்ப்புகள் என்று ஏதாவது ஒன்றில் வேலை கிடைத்து பணியில் அமரும் நபர்கள் தற்போது டில்லி, கோல்கட்டா போன்ற நகரங்களில் மட்டுமல்லாது பீகார் மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் அதிகரித்து வருகின்றனர்.

போட்டித் தேர்வுக்கு தயாராவது ஒரு புறம் என்றால், இந்தி போன்ற கூடுதல் மொழிகளை அறிவது, ஆங்கிலம் பேசும் மற்றும் எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது என்று இவர்களின் தயாராகும் தன்மை பன்முகம் கொண்டதாக இருக்கிறது. வெளியூரில் தான் வேலை என்றால் அதுவும் அரசு வேலை என்றால் தற்போதைய சூழலில் கசக்கவா செய்யும்?

ராணுவத்தின் மிலிடரி இன்ஜினியரிங் சர்விசஸ் போன்ற பிரிவுகளில் எப்போதும் பணி வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. 15 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்கள் என்றால் இவற்றுக்குப் போட்டியிடுபவர் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகும் நபர்கள் எழுத்துத் தேர்வில் பல ஆயிரம் பேருக்கு முன்õனல் சென்று நேரடியாக வாய்ப்புக்கு அருகில் இறங்கி விடுகிறார்கள். எனவே அறிவிக்கப்படும் வாய்ப்புகளை நழுவ விடாமல் விண்ணப்பிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us