எனது மகள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறாள். இந்த படிப்பை அவள் படிப்பதால் என்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும் என்று கூறவும். | Kalvimalar - News

எனது மகள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறாள். இந்த படிப்பை அவள் படிப்பதால் என்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும் என்று கூறவும். மார்ச் 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

 

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடிப்பவர்கள் புரொகிராமர்கள், வெப் டெவலப்பர், இ காமர்ஸ் சிறப்பு நிபுணர்கள் என பல்வேறு விதமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். டெலிகம்யூனிகேஷன்ஸ், ஆட்டோமோடிவ், ஏரோஸ்பேஸ் போன்ற துறைகளில் பல்வேறு விதமான வேலைகள் இவர்களுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் நிறுவனங்கள், சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனங்கள் என பல்வேறு வாய்ப்புகளைத் தரும் நிறுவனங்களும் இப் படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை தருகின்றன.

மேலும் ஏரோநாடிக்ஸ், ஸ்பேஸ் சயின்ஸ், பெட்ரோலியம் துறை, வேதியியல் ஆலைகள், மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் கம்ப்யூட்டர் பிரிவுகளிலும் நல்ல வேலைகள் உள்ளன. முதலில் உங்களது மகள் அவரது படிப்பில் நன்றாக கவனம் செலுத்தச் சொல்லுங்கள். அவரது திறன்கள் கூர்மையாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். முதலாமாண்டிலிருந்தே அவரை இவற்றில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள்.

 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us