ஹாங்காங்கில் படிக்க முடியுமா? அது பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஹாங்காங்கில் படிக்க முடியுமா? அது பற்றிக் கூறவும்.பிப்ரவரி 16,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

 

படிப்பறிவின்மையை நீக்க முனைப்புடன் பல முயற்சிகளை எடுத்து பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கும் நாடு சீனா. கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் கல்வி வெகுவாக மேம்பட்டிருக்கிறது.

சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கிலும் கல்வி பயிலமுடியும். 1075 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்டிருக்கும் ஹாங்காங்கில் அரசின் நிதி உதவி பெறும் 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஹாங்காங் பல்கலைக்கழகம் உட்பட புகழ் பெற்ற பிற பல்கலைக்கழகங்களும் உள்ளன.

வெளிநாட்டவர் விசா பெறுவது முதற்படி. சீனாவின் தூதரகங்களில் இதைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். இதன் கல்வி நிறுவனங்களில் விடுதி வசதியைப் பெறுவது தான் சிரமமாக இருக்கிறது. எதற்காக ஹாங்காங்கில் படிக்க விரும்புகிறோம் என்ற விளக்கக் கட்டுரையைத் தர வேண்டியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் நம் நாட்டில் படித்திருக்கிறோம், ஆங்கிலத் திறன் எப்படி மற்றும் பொதுவாக தொடக்கம் முதல் எப்படிப்படித்திருக்கிறோம் போன்றவை படிப்புக்கான அனுமதி தரப்பட மதிப்பிடப்படுகிறது.

ஆங்கிலத் திறனறிய டோபல்/ ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் பயன்படும். விண்ணப்பக் கட்டணம் தோராயமாக ரூ.1000. ஆண்டுக்குக் கல்விக் கட்டணம் ரூ.5 லட்சம். பட்ட மேற்படிப்பு என்றால் ஆண்டுக்கு ரூ.8 லட்சம். வெளிநாட்டினர் இந்தியா வந்து படிக்க விரும்பும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஹாங்காங் சென்று படிப்பது அவசியம் தானா? இதற்கான வசதி நம்மிடம் உள்ளதா என்பதை யோசித்து அதற்கேற்ப முடிவு எடுக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us