பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்துள்ளேன். படிப்பு முடித்தவுடனேயே திருமணம் ஆகி விட்டது. நான் எம்.எஸ்சி., படிப்பது பலன் தருமா? இதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்துள்ளேன். படிப்பு முடித்தவுடனேயே திருமணம் ஆகி விட்டது. நான் எம்.எஸ்சி., படிப்பது பலன் தருமா? இதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி?பிப்ரவரி 16,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

 

மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் பட்ட மேற்படிப்பை முடிப்பதே சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தரும் என்பதை இந்தப் பகுதியில் அடிக்கடி சுட்டிக் காட்டி வருகிறோம். எனவே நீங்கள் எம்.எஸ்சி., படிப்பது நல்லது. எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி முடிப்பவர்களில் பலர் வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். ஆனால் பட்ட மேற்படிப்பில் சேர்க்கை கிடைப்பது பெரிய காரியமாக உள்ளது. சில கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலமும் பிறவற்றில் கடுமையான அதிகக் கட்டணம் வாங்கிக் கொண்டும் சேர்க்கை தரப்படுகிறது.

பெரும்பாலும் ஆய்வுக் கூடங்களில் தான் உங்கள் படிப்புக்கான வேலை கிடைக்கிறது. மேலும் பெரிய மருத்துவமனைகள், மதுபான தயாரிப்பகங்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பகங்கள் மற்றும் மருந்து கம்பெனிகள் ஆகியவற்றிலும் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அரசு மற்றும் தனியார் துறைகளில் இவை உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us