பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்கலாம்? துறையின் வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்கலாம்? துறையின் வாய்ப்புகள் எப்படி?பிப்ரவரி 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

தற்போதைய நவீன தொழில் யுகத்தின் அடிப்படையாக விளங்குவது பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழில் தான். பிளாஸ்டிக்கை சிந்தடிக் ரெஸின்கள், எத்திலீன், பென்சீன், அம்மோனியா போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு உருவாக்குகிறார்கள். விஞ்ஞானிகள் பிளாஸ் டிக்கின் புதிய வகைகளை ஆய்வுகளின் மூலமாக உருவாக்குகிறார்கள்.

பிளாஸ்டிக் விரிப்புகள், உடையாத பாத்திரங்கள், தோல் ரெக்ஸின் போன்ற பல்வகைப் பொருட்களின் தயாரிப்பானது பிளாஸ்டிக்கை நம்பியே உள்ளது. பிளாஸ்டிக்/பாலிமர் இன்ஜினியரிங் படிப்பில் இன்று பலர் விரும்பி சேருவதைப் பார்க்க முடிகிறது. அடிப்படையில் விஞ்ஞான நோக்கு கொண்டவர்களுக்கான சிறந்த துறை இது.

உலகெங்கும் இத் துறை வேகமாக வளரும் துறையாகவே விளங்குவதைக் காண்கிறோம். நுகர்வோர் கலாசாரம் உச்சத்தில் இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடிப்படையில் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருப்போர் மட்டுமே இத் துறைக்குச் செல்ல முடியும். இத் துறையில் பி.டெக்., பி.இ., படிப்புகள் தரப்படுகின்றன. பி.எஸ்சி., வேதியியல் முடித்துவிட்டு பி.டெக்., பாலிமர் டெக்னாலஜி படிப்பவர்களையும் நாம் காண முடிகிறது.

சென்னையிலுள்ள மதிய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இத் துறையில் சிறப்புப் படிப்பைத் தருகிறது. இது சென்னையிலுள்ள கிண்டியில் அமைந்துள்ளது. இது பின்வரும் படிப்புகளை நடத்துகிறது. பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங், பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் பிராசசிங் டெக்னாலஜி, பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெஸ்டிங் மற்றும் கன்வெர்ஷன் டெக்னாலஜி, பி.ஜி. டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் கம்போசிட் டெக்னாலஜி ஆகிய படிப்புகளை இது நடத்துகிறது. இதற்கு சிப்பெட் என்னும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முழு விபரங்களை அறியும் இணைய முகவரி: www.cipetindia.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us