செராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும். | Kalvimalar - News

செராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும். பிப்ரவரி 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

களிமண், ஸிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது செராமிக் என்பது. செங்கல், சிமெண்ட், ஓடு, பைப், கண்ணாடி போன்ற துறைகளில் செராமிக்கின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. மேலும் பானைகள், ஸ்பார்க் பிளக்குகள், எலக்ட்ரிகல் இன்சுலேட்டர்கள், கட்டிங் உபகரணங்கள், பேரிங்க்ஸ் போன்றவற்றிலும் இதன் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தொழிற்பொருட்கள், டையோடுகள், கம்ப்யூட்டர் மெமரி பாகங்கள், கெபாசிட்டர் போன்றவற்றிலும் இது அதிகமாக பயன்படுகிறது. செராமிக் படிப்புகளில் அதன் குணாதிசயங்கள், உற்பத்தி, டிசைனிங், பயன்பாடு போன்றவை படிக்கப்படுகிறது.

செராமிக் டெக்னாலஜி படித்தவர்கள் ஆலைகளிலும் உற்பத்திக் கூடங்களிலும் பணி புரிகிறார்கள். ஆய்வாளர்கள் லேபுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணி புரிவதைப் பார்க்கலாம். அடிப்படையில் எதையும் ஆய்ந்து நோக்கும் குணம் உள்ளவர்களும் விஞ்ஞான மனப்பான்மை உடையவர்களும் செராமிக் துறைக்கு ஏற்றவர்கள்.

இதில் பி.எஸ்சி., பி.டெக்., பி.இ., படிப்புகள் நடத்தப்படுகின்றன. பட்டமேற்படிப்பும் உண்டு. இவற்றைப் படித்து முடிப்பவர்களுக்கு பொர்சலைன், சிமெண்ட், எனாமல் ரிப்ராக்டரி, இரும்பு எக்குத் தொழிற்சாலை, நியூக்ளியர் ஆலைகள் போன்றவற்றில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us