தரமான மரைன் படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

தரமான மரைன் படிப்பை எங்கு படிக்கலாம்? பிப்ரவரி 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

4 ஆண்டு படிப்பான மரைன் இன்ஜினியரிங் படிப்பு கடந்த சில ஆண்டுகளாகத் தான் பரவலாக அறியப்படத் துவங்கியுள்ளது. கப்பல்களைக் கட்டுவது மற்றும் பராமரிப்பது, நிலப்பரப்பில் துறைமுகங்கள் மற்றும் கார்கோ வசதிகளை நிறுவுவது போன்ற பல அம்சங்களும் இப் படிப்பில் அடங்குகின்றன.

ஒரு கப்பலின் இன்ஜின் அறையை முழுவதுமாக நிர்வகிப்பது மரைன் இன்ஜினியர்கள் என்றே கூறலாம். கப்பலிலுள்ள மோட்டார்கள், இன்ஜின்கள், புரபல்லிங் இயந்திரங்கள் போன்றவற்றை நிர்வகிப்பது இவர்களே. கேஸ், ஸ்டெம் டர்பைன், டீசல் மற்றும் நியூக்ளியர் ஆலைகள் ஆகியவற்றை கப்பலில் பராமரிப்பதுடன் இவற்றின் புதிய வடிவங்களை அமைப்பதும் இவர்கள் தான். எனவே இப் படிப்பை முடித்து பணி புரிபவர்கள் அனைவருமே சிறப்பான சம்பளத்தைப் பெறுகின்றனர்.

துறையின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என மும்பையிலுள்ள ஐ.ஐ.டி.,யையும் தமிழகத்தில் மதுரையில் இயங்கி வரும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாடிகல் சயின்ஸ் நிறுவனத்தையும் கூறலாம். சென்னையில் ஓரிரு கல்லூரிகளிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு கல்லூரிகளிலும் இது நடத்தப்படுகிறது. இப் படிப்பின் தரமானது அடிப்படை வசதிகளை, சம்பந்தப் பட்ட கல்லூரி எப்படி அமைத்துத் தந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் மதுரையில் உள்ள ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப்நாடிகல் சயின்ஸ் என்னும் கல்வி
நிறுவனம் மிகத் தரமான கல்வியைத் தருகிறது.

இதன் 4 ஆண்டு படிப்பானது எம்.எஸ்., மரைன் இன்ஜினியரிங் என அழைக்கப்படுகிறது. 17 முதல் 20 வயதுக்குள் உள்ள பிளஸ் 2ல் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் படித்திருப்பவர்கள் இதில் சேரலாம். இது முழுக்க முழுக்க ரெஸிடன்ட் படிப்பு என, அதாவது கல்லூரி வளாகத்திலேயே தங்கி படிக்க வேண்டிய படிப்பாகும்.

திறன் பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகையும் தரப்படுகிறது. ஆப்டிடியூட் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் பிளஸ் 2ல் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையிலும் இப் படிப்பில் சேரலாம். இதில் படிப்பை முடிப்பவருக்கு ஆங்கிலோ ஈஸ்டர்ன், எஸ்ஸார், ஈகிள் ஷிப் மேனேஜ்மென்ட், கிரேட் ஈஸ்டர்ன், பாரமவுண்ட், யூரேசியா குழுமம் போன்ற முன்னணி கப்பல் நிறுவனங்களில் சிறப்பான பணி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

முழு விபரங்களையும் பெறும் இணைய தள முகவரி  www.rlinstitutes.com

தகவல்களை 0452 - 391 8615 / 391 8614 ஆகிய தொலைபேசி வாயிலாகவும் பெறலாம்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us