பி.இ. இறுதியாண்டு படிக்கும் எனது மகன் படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

பி.இ. இறுதியாண்டு படிக்கும் எனது மகன் படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் பற்றிக் கூறலாமா?ஜனவரி 26,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இது இன்று நமது மாணவர்கள் பலரிடம் இருக்கும் ஒரு முக்கியமான சந்தேகம். நமது பாடத் திறன்களுடன் சாப்ட் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே நமது நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இன்று வேலை வாய்ப்புத் துறையால் அதிகம் பேசப்படும் வார்த்தையும் இது தான். ஒரு நிறுவனத்தின் அடிப்படை உற்பத்தி அல்லது சேவையோடு தொடர்புடையது அந்த நிறுவனத்திற்குத் தேவைப்படும் சாப்ட் திறன்கள். அடிப்படையில் சாப்ட் திறன்கள் என்றால் * தகவல் தொடர்புத் திறன்கள் * சக ஊழியர் அல்லது பணியாளரோடு பழகும் திறன்கள் * குழுத் திறன்கள் * தலைமை தாங்கி வழிநடத்தும் திறன்கள் * அடிப்படை சுபாவம் * இணைந்து செயலாற்றும் மனப்பாங்கு * தட்டிக்கொடுத்து ஊழியர்களை ஊக்குவித்து அவர்களது அடிப்படை செயலாற்றும் திறனை மேம்படுத்தும் திறமை ஆகியவற்றைக் கூறலாம். இன்று இந்த சாப்ட் ஸ்கில்ஸ் மேம்பாட்டுக்கு உதவ எண்ணற்ற மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் மதுரை போன்ற சற்றே பெரிய நகரங்களில் செயல்படுகின்றன. ஊரகப்பகுதியில் படிக்கும் மாணவர்களுக்கு இவை நிச்சயம் உதவும். இன்ஜினியரிங் இறுதியாண்டில் நுழைந்தவுடன் இவற்றில் சேரலாம். மாணவர்களாகவே சாப்ட் ஸ்கில்சை வளர்த்துக் கொள்வதும் முடியாத காரியமல்ல. ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகள், பத்திரிகை வாசிப்பு, பொதுவான தலைப்புகளை விளையாட்டாக நண்பர்களோடு விவாதித்தல் போன்றவற்றை தொடர்ந்து பொழுது போக்காக செய்தாலே இவை வளர்ந்து விடும். பாடத்தில் ஒருவர் பெற்றிருக்கும் திறன்களைப் போலவே இந்த சாப்ட் ஸ்கில்சும் மிக மிக முக்கியம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us