இந்தியாவிலுள்ள ஏர்போர்ட்டுகளை நிர்வகிக்கும் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் அலுவலகங்களில் காலியாகவுள்ள ஏர்டிராபிக் கன்ட்ரோல் பணி நிலையிலான ஜூனியர் எக்சிகியூடிவ் மற்றும் ஜூனியர் எக்சிகியூடிவ் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் எக்சிகியூடிவ் (ஏ.டி.சி.,) பணிக்கு எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்ஸ்/ரேடியோ இன்ஜினியரிங்/ எலக்ட்ரிகல் ஆகியவற்றில் ஒன்றில் பி.இ., பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியலில் எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதை எலக்ட்ரானிக்ஸ், ஒயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் சிறப்புப் படிப்பாக முடித்திருப்பதும் அவசியம். ஜூனியர் எக்சிகியூடிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்ஸ்/எலக்ட்ரிகல் இவற்றில் ஒன்றில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியலில் எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதை எலக்ட்ரானிக்ஸ், ஒயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் சிறப்புப் படிப்பாக முடித்திருப்பதும் அவசியம். முழு விபரங்களையும் இந்தப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது www.airportsindia.org.in என்னும் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.