தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன். போட்டித் தேர்வுகளில் தகுதி பெற்று நேர்முகத் தேர்வுகளுக்காக செல்லும் போது ஏன் தற்போதைய வேலையை விடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் சொல்வது என தனக்குத் தெரியவில்லை என என் சகோதரர் கூறுகிறார்.உங்களது ஆலோசனையை கோருகிறேன். கூறவும். | Kalvimalar - News

தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன். போட்டித் தேர்வுகளில் தகுதி பெற்று நேர்முகத் தேர்வுகளுக்காக செல்லும் போது ஏன் தற்போதைய வேலையை விடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் சொல்வது என தனக்குத் தெரியவில்லை என என் சகோதரர் கூறுகிறார்.உங்களது ஆலோசனையை கோருகிறேன். கூறவும். ஜனவரி 19,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

எந்த நேர்முகத் தேர்விலும் இது ஒரு கடினமான கேள்விதான்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர் அரசு நிறுவன வேலைக்குச் செல்லும் போது பாதுகாப்பான பணி என்பதால் போன்ற பதிலைத் தான் எவருமே தருகிறார்கள். ஆனால் இது நேர்முகத் தேர்வை நடத்துபவர்களுக்கு ஏற்புடையதல்ல. நாளைக்கே இதைவிட பாதுகாப்பான வேலை கிடைத்தால் அதற்குச் சென்று விடுவர் என்ற அடிப்படையில் இந்த பதிலைத் தொடர்ந்து பல இக்கட்டான கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

 

எனவே ஒரே ஒரு காரணமாகக் கூறாமல் பதிலளிக்கலாம். இப்படி பதில் அளிக்கையில் தற்போது நீங்கள் பணி புரியும் நிறுவனத்தை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். உங்களது மேலதிகாரிகளையும் நிறுவனச் சூழலையும் விமர்சிப்பதையும் தவிர்ப்பது முக்கியம். உங்களது பதிலானது உங் களது உணர்வுகளின் வெளிப்பாடாக இல்லாமல் லாஜிக் ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பது முக்கியம். உங்களது நீண்ட கால குறிக்கோளை நிறைவேற்ற உதவுவதாக இந்த புதிய வேலை இருக்கும் என்பதாக அதை நீங்கள் உருவகித்து பதில் தரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us