டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா? இன்டீயர் டிசைனிங் படிக்கலாமா? | Kalvimalar - News

டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா? இன்டீயர் டிசைனிங் படிக்கலாமா?ஜனவரி 19,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ள நீங்கள் பி.ஆர்க்., படிக்கத் தேவையில்லை. சிவில் இன்ஜினியரிங்கோடு தொடர்புடைய கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங் படிப்பது பலன் தரும். மேலும் இன்டீரியர் டிசைனிங்கில் ஆர்வமுள்ள நீங்கள் இதில் பயிற்சி பெற்றால்


* இன்டீரியர் டெகரேடர்
* கிரியேட்டர் செட் டிசைனர்
*எக்சிபிஷன் டிசைனர்
*விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர்
போன்ற பணிகளில் ஈடுபடலாம். ஒரு படிப்பை வெறும் படிப்பாகப் படிப்பதால் மட்டுமே நாம் அதில் சிறந்து விளங்க முடியாது. ஏற்கனவே தொழில் நுட்பத் தகுதி பெற்றுள்ள நீங்கள் பின்வரும் சிறப்புத் திறன்களைப் பெறுவதும் அவசியம்.


* பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருப்பது
* ஓவியத் துறையில் ஆர்வம் இருப்பது
* கற்பனை வளம் மிக்கவராக இருப்பது
* படமாக வரைவதை உருவமாக மாற்றும் ஆற்றல் பெறுவது


தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.


* காலேஜ் ஆப் ஆர்ட் அண்ட் டிசைன், 7 பி.வி. கோவில் தெரு, அமைந்தகரை, சென்னை 600 029.
* ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு
மேலும் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனம் இந்த படிப்பை நடத்துகிறது. மேலும் சென்னை
யிலுள்ள எக்ஸ்டீரியர்ஸ் இன்டீரியர்ஸ் நிறுவனம் இதில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது. இவற்றைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us