இந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா? | Kalvimalar - News

இந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா?ஜனவரி 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

நமது குறிக்கோள் இன்ஜினியரிங் என்றே பொதுவாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நினைக்கும் போது ராணுவப் பணியைப் பற்றி ஆர்வமுடைய
வராக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். பிளஸ் 2ல் இயற்பியல் கணிதம் வேதியியல் படிப்பவர்கள் தரைப்படை நடத்தும் பிளஸ் 2 டெக்னிகல் என்ட்ரி ஸ்கீம் மூலமாக சிறப்புப் பயிற்சி பெற்று பின் நேரடியாக அதிகாரியாகப் பணியில் அமர முடியும்.


பிளஸ் 2ல் இந்தப் பாடங்களைப் படிக்காதவரும் என். டி. ஏ. நடத்தும் தேர்வு எழுதித் தகுதி பெற்றால் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று பின்
அதிகாரியாக பணி புரியலாம். நமது இதழில் இவை பற்றிய செய்திகளை வெளியிடுகிறோம். கவனித்து விண்ணப்பிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us