இப்பணியில் ஆண்கள் மட்டுமே சேர முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கேடட் என்ட்ரி என்ற பணிக்கும் பிளஸ் 2 தகுதிக்கான பணிக்கும் 16 1/2 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைப் படித்திருப்பது இதற்கு அவசியம்.
இவற்றில் மொத்தமாக 70 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதும் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீதமாவது பெற்றிருப்பதும் அவசியம். நேரடி முறைப் பணியில் சேர 19 1/2 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/ஏவியானிக்ஸ்/கம்ப்யூட்டர் இவற்றில் ஒன்றில் ஒரு இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.