ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அவற்றின் முன்னணி படிப்புகள் பற்றியும் கூறமுடியுமா? | Kalvimalar - News

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அவற்றின் முன்னணி படிப்புகள் பற்றியும் கூறமுடியுமா? ஜனவரி 05,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆஸ்திரேலியாவில் மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 37 பல்கலைக்கழகங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாலும் 2 பல்கலைக்கழகங்களுக்கு தனியாராலும் நிதியுதவி தரப்படுகிறது. சராசரியாக இவை ஒவ்வொன்றிலும் 3000 முதல் 50000 மாணவர்கள் படிக்கிறார்கள். பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், பி.எச்டி. போன்ற படிப்புகள் தரப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பைக் கூட இணைந்து ஒரே சமயத்தில் படிக்கும் வாய்ப்பும் உண்டு.

ஆஸ்திரேலிய கல்வியின் சிறப்பம்சங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களோடு கூடிய இணைந்து செயலாற்றும் உடன்பாடு, ஆய்வு நெறி முறைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதனால் ஆய்வுத் துறைகளில் ஆஸ்திரேலியாவே முதன்மையாக விளங்குகிறது.

மரபியல், பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி மற்றும் விளையாட்டு தொடர்பான துறைகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. விளையாட்டை அறிவியல் நோக்கில் அணுகுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக உலக சாம்பியனாக திகழ்கிறது. மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா துறைகளில் புதுமையான பல படிப்புகளை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us