கடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும். டிசம்பர் 29,2009,00:00 IST
அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பொதுப்பிரிவுப் பணிக்கு பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வரையில் கணிதம் மற்றும் இயற்பியலை பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதன் பொதுப்பிரிவு பைலட் பணிக்கு பி.எஸ்சி., இயற்பியல் தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2வுக்குப் பின் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். 19 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதன் டெக்னிகல் பணிக்கு இன்ஜினியரிங் தகுதி தேவை. 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.நல்ல உடற்தகுதியும் இவற்றுக்குத் தேவை.