அமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா? படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா? | Kalvimalar - News

அமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா? படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா? டிசம்பர் 22,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்க விசாவுக்கான நேர்காணலில் கோர்ஸ் கம்ப்ளீஷன் சான்றிதழ் மற்றும் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள் இருந்தால் போதும். எந்த அமெரிக்கக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயில இருக்கிறீர்களோ அதன் சேர்க்கைக் கடிதம், நுழைவுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், நிதி ஆதாரச் சான்றிதழ்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியம்.

கோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலை தூர முறை மேனேஜ்மெண்ட் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் பற்றிக் கூறவும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தவிர்த்த பிற வளாகங்களில் சிறப்புப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் கிளையில் நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரங்கள் இதோ...

எம்.பி.ஏ.,


* ஏர்லைன் மற்றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட்
* பாங்கிங்
* இன்சூரன்ஸ் மற்றும் பைனான்சியல் சர்விசஸ்
* இபிசினஸ்
* இகவர்னன்ஸ்
* எனர்ஜி மேனேஜ்மென்ட்
* பைனான்சியல் மேனேஜ்மென்ட்
* ஓட்டல் மேனேஜ்மென்ட்
* இன்ப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட்
* பார்மாசூடிக்கல் மேனேஜ்மென்ட்
* போர்ட் மேனேஜ்மென்ட்
* ரீடெயில் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்
* சாப்ட்வேர் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட்
* டூரிசம் மேனேஜ்மெண்ட்
* டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட்
* வென்ச்சர் கேபிடல் அண்ட் கேபிடல் மார்க்கெட்


எம்.சி.ஏ.,


* ஐ.டி. எனேபிள்ட் சர்விசஸ்
* கால் சென்டர் மேனேஜ்மென்ட்
* சாப்ட்வேர் குவாலிடி அஸ்யூரன்ஸ்
* நெட்வொர்க்கிங்


எம்.எஸ்சி.,


* கால்சென்டர் மேனேஜ்மென்ட்
* கம்ப்யூட்டர் சயின்ஸ்
* ஐ.டி.,
* சாப்ட்வேர் புராஜக்ட் மற்றும் குவாலிடி
      மேனேஜ்மென்ட்
* கம்ப்யூட்டர் டெக்னாலஜி
* சாப்ட்வேர் இன்ஜினியரிங்


இவை தவிர டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளையும் இந்த பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.


முழு விபரங்களறியும் முகவரி

 

The Director

Directorate of  Online And Distance Education

Anna university, Coimbatore

GCT Campus

Coimbatore 641 013.

போன்: 04222455353
இமெயில்: dode@annaunive.ac.in
இன்டர்நெட் முகவரி: www.annauniv.ac.in

 


 

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us