தமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும். | Kalvimalar - News

தமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும். டிசம்பர் 08,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் துவங்கி 6 மாத காலம் வரை நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே கலந்து கொண்டிருப்பவர்களும் சிவில் சர்விசஸ் முக்கியத் தேர்வு வரை எழுதியிருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.

முழு நேரம் பயிற்சி மையத்திலேயே தங்கிப் படிப்பது, பகுதி நேர மாலை வகுப்புகளில் அங்கே தங்காமலே படிப்பது என 2 வகைகளாக இது நடத்தப்படும். இப்படி இந்த பயிற்சியானது தங்கிப் படிப்பது தங்காமல் படிப்பது என பிரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கு எத்தனை இடங்கள் என்பது கீழே தரப்பட்டுள்ளது.


இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து
பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.


குறைந்தது 21 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30
வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35
வயதுக்குள்ளும் பிறர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.


பிறருக்குக் கட்டணம் இல்லை. எனினும் இவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். அதற்கு மேலிருப்பவர்கள் மாத விடுதிக்கட்டணம் செலுத்த வேண்டும்.
பகுதி நேரப் பயிற்சியில் சேருவோருக்கு விடுதி வசதி கிடையாது. பகுதி நேர வகுப்புகள் மாலை 6.30லிருந்து 8.30வரை மட்டுமே நடத்தப்படும்.
இந்த பயிற்சியில் சேர்ந்திட பொது நுழைவுத் தேர்வு ஒன்றின் மூலமாக மட்டுமே முடியும்.


இத் தேர்வானது சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் நடத்தப்படும்.


இத் தேர்வானது அப்ஜக்டிவ் கேள்விகளைக் கொண்டிருக்கும். இதில் இந்திய அரசியல், பொருளாதாரம், புவியியல், பொது அறிவியல் மற்றும் நடப்புச் செய்திகள் ஆகியவற்றில் கேள்விகள் இடம் பெறும்.
முழு விபரங்களையும் படிவத்தையும் www.civilservicecoaching.com

என்னும் இணைய தளத்திலிருந்து பெறலாம். தகுதிகள், கட்டணங்கள், விடுதி வசதி போன்ற அனைத்து விபரங்களையும் இத் தளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.

 

முகவரி:

Director and Director General of Training

Anna Institute of Management

Chennai 600 028.

 

தொலைபேசி எண்கள்: 044  26211475, 26211909


பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us