மைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்? | Kalvimalar - News

மைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்?டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

அடிப்படையில் நீங்கள் மிக அதிகமான திறனுடைய மாணவராக இருப்பதை உங்களது மதிப்பெண்களும் சாதனைகளும் காட்டுவதால் போட்டித் தேர்வு எழுதி நிர்வாகப் பணியிடங்களுக்கு செல்ல வேண்டாம். கட்டாயம் நல்ல கல்வி நிறுவனம் ஒன்றில் பட்ட மேற்படிப்புக்கு முயற்சிக்கவும்.

ஆய்வையும் மேற்கொள்ளும் அளவுக்கு உங்களது பாடத்திறன்கள் இருப்பதால் மேற்படிப்பு தான் உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தைத் தரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி, மாலிகூலர் பயாலஜி போன்ற பிரிவுகளில் ஒருவர் வெறும் பட்டப்படிப்பு படிப்பதுடன் நிறுத்தாமல் அதில் பட்ட மேற்படிப்பு முடித்தால் மட்டுமே சிறப்பான வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார் என்பதை சமீபத்திய புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us