வங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை? | Kalvimalar - News

வங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை?டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் நீங்கள் போட்டித் தேர்வுகள் பற்றி அறியாமலிருப்பது வியப்பாக இருக்கிறது. வங்கிப் பணியிடங்கள் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்படுகிறது. கல்வித் தகுதிகள் என்பவை ஒரு தேர்வை நீங்கள் எழுதும் தகுதியை மட்டுமே தருகிறது. குறிப்பிட்ட தகுதிக்கு குறிப்பிட்ட பணிகள் கிடைக்கும் என்பதே கிட்டத்தட்ட இல்லை. ஐ.டி.. தகுதிகளைப் பெற்றிருப்பவருக்கு சில இடங்களில் போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடித்தேர்வு மட்டுமே நடத்தப்படுவதை மட்டும் காண்கிறோம். எனவே எந்த வங்கியின் கிளார்க்/பி.ஓ., பணிகளுக்கும் குறிப்பிட்ட தகுதியுடையவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என்றெலாம் நினைக்க வேண்டாம். பொதுவாக அரசு வங்கிகளின் கிளார்க் பணிகளுக்கு பிளஸ்2 தகுதியும் பி.ஓ., பணிக்கு பட்டப்படிப்பு தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் திறன்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us