நாஸ்காம் தேர்வு பற்றிக் கூறவும். | Kalvimalar - News

நாஸ்காம் தேர்வு பற்றிக் கூறவும். டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இத் தேர்வில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) படிப்பில் ஒன்றில் இறுதியாண்டு படிப்பவர் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதம் பெற்றிருப்பது முக்கியம். இத் தேர்வை ஆன்லைன் தேர்வாகவும் தேர்வு மையத்தில் எழுத்துத் தேர்வாகவும் எழுதலாம். இத் தேர்வில் வெற்றி பெறுபவர் பட்டியல் நாஸ்கா மால் பராமரிக்கப்பட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மாணவர்கள் பணிக்காகத் தேர்வு செய்யப்படுவர்.

முதல் தாளில் பின்வரும் பகுதிகள் இடம் பெறும்.

* Grammar and Comprehension
* Analytical Ability and Logical Reasoning
* Eye for Detail
* Programming Ability
* Learning Ability
* Written English Test

தாளில் உங்களது பாடமான ஐ.டி., கான்செப்ட்ஸ், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், டெக்ஸ்டைல், பயோ-டெக்னாலஜி, டெலி கம்யூனிகேசன்ஸ் இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

தேர்வு தொடர்பான முழுவிபரங்களை http://www.nac.nasscom.in/nactech/#2 என்னும் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us