வங்கி புரபேஷனரி அதிகாரி எனும் பணி | Kalvimalar - News

வங்கி புரபேஷனரி அதிகாரி எனும் பணி

எழுத்தின் அளவு :

வங்கி என்று எடுத்துக் கொண்டால், அதில் பல்வேறான செயல்பாடுகள் இருக்கும். இப்பணிகளை மேற்கொள்ளும் நபர், வங்கிப் பணியாளர் எனப்படுகிறார். இவருக்கு, பேங்க் புரபேஷனரி அலுவலர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

அவர்கள், வங்கிகளில் இடப்படும் பொதுமக்களின் பணத்தை, சரியான முறையில் கணக்கிட்டு, பராமரித்து, பாதுகாத்து வைக்கின்றனர். உங்களின் பணத்தை சரியான முறையில் பாதுகாத்து வைக்க, அவர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள்.

பேங்க் புரபேஷனரி அலுவலர் என்றால்...

வங்கியில், ஒருவர் பணியமர்த்தப்படும்போது, அவருக்கு வழங்கப்படும் ஆரம்ப பணிநிலையின் பெயர்தான் Bank Probationary Officer. இந்தப் பணிநிலை பொதுவாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு தரப்படும்.

இந்த காலகட்டத்தில், கடன்கள் மற்றும் அட்வான்ஸ்கள், வெளிநாட்டு எக்ஸ்சேஞ்ச், கிரெடிட் ரேட்டிங், ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒதுக்கப்படும்.

இப்பணிக்கு தேவைப்படும் திறன்கள்

* நல்ல தகவல்தொடர்பு திறன்
* கால்குலேஷன் மேற்கொள்ளும் திறன்
* விரைவுத்தன்மை
* நுட்பம்
* நல்ல அமைப்பாக்கத் திறன்
* நெகிழ்வுத்தன்மை
* பணியிட மாற்றத்தை எளிதில் ஏற்கும் தன்மை

நுழைவுத் தேர்வு

ஒவ்வொரு வங்கியும், தனக்கான தனி நுழைவுத்தேர்வு நடைமுறையைக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பான, பொது நுழைவுத்தேர்வு என்பதாக எதுவும் இல்லை.

எங்கே படிக்க...

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மட்டும், கீழே தரப்பட்டுள்ளன. அவை,

Triumphant Institute of Management Education
IFAM
Maharashtra Career Academy
Institute of Banking Personnel Selection
National School of Banking

படிப்புகள் மற்றும் அவற்றுக்கான தகுதிகள்

Bank Recruitment Probationary Officer Course (BRPO)
Bank Clerical Recruitment Comprehensive Course (CRCC-COMP)
RBI Grade A Course
RBI Grade B Course
LIC/GIC Assistant Administrative Officer Course (LIC/GIC-AAO)
LIC Assistant Course (LIC-ASST)

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும், படிப்பின் காலஅளவில் வேறுபாடுகள் உண்டு. குறைந்தபட்சம் 45 நாட்களிலிருந்து 3 மாதங்கள் வரை இருக்கும். வணிகப் பிரிவில்(காமர்ஸ்) படித்து முடித்த அனைத்து மாணவர்களும், இப்படிப்பை மேற்கொள்ளலாம்.

பணி நிலைகள்

ஒரு Bank Probationary அலுவரின் பணி நிலைகள், தினசரி வங்கி மேலாண்மை நடவடிக்கைகள் என்ற எல்லைக்குள் உட்பட்டது. அவை,

* அக்கவுன்ட்ஸ் கிளர்க்
* அட்மினிஸ்ட்ரேடிவ் அசிஸ்டன்ட்
* கேஷியர்
* கிரெடிட் ஆபிசர்
* பைனான்சியல் டீலர்ஸ் அசிஸ்டன்ட்
* பைனான்சியல் இன்ஸ்டிட்யூஷன் பிராஞ்ச் மேனேஜர்
* இன்சூரன்ஸ் ஆபிசர்
* போஸ்டல் எம்ப்ளாயி

பணி வாய்ப்புகள்

வங்கிப் பணியாளர்களுக்கென்று ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும், இதர நிதி சார்ந்த நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

சம்பளம்

ஆரம்ப நிலையில், வங்கி Probationary அலுவலருக்கான சம்பளம், சராசரியாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் இருக்கும்.

ஆனால், ஆண்டுகள் கடந்து, பதவி உயர்வும் கிடைக்கும்போது, சம்பளமும் அதற்கேற்ப உயரும். அப்போது, மாத சம்பளம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பெறலாம்.

எதிர்கால வாய்ப்பு

இது சமூகத்தில் மதிப்பை பெற்றுத்தரக்கூடிய பணிகளில் ஒன்று. மேலும், இப்பணியில், தொடர்ச்சியான வளர்ச்சியை எட்டக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. இதுதவிர, இத்துறையில் எப்போதுமே அதிக சம்பளம் உண்டு என்பதால், முறையான பொருளாதாரப் பாதுகாப்பும் கிடைக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us