பி.எஸ்சி உளவியல் படிக்கிறேன். இதை முடித்தால் என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும்? | Kalvimalar - News

பி.எஸ்சி உளவியல் படிக்கிறேன். இதை முடித்தால் என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும்? டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

சைகாலஜி எனப்படும் உளவியல் துறை தற்போதைய வாழ்வியல் சூழலில் மிக தேவைப்படும் துறைளுல் ஒன்று. அடிப்படையில் நல்ல சுய நம்பிக்கை, மற்றவர்களை கவனித்து புரிந்து கொள்ளும் ஆர்வம், பொறுமை, பேச்சுத் திறன், பகுத்தாராய்ந்து முடிவெடுக்கும் திறன் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இந்த படிப்பு முடிக்கும் போது மிகவும் உதவியாக இருக்கும். பட்டப்படிப்புடன் இதை நிறுத்தாமல் பட்ட மேற்படிப்பு மேற்கொள்பருக்கே வாய்ப்புகள் அதிகம்.

தவிர வெறும் தகுதிக்காக என்று இல்லாமல் பாடத்தை நன்றாக புரிந்து படிப்பதும் ஆய்வு மனப்பாங்குடன் அலசுதும் மிக முக்கியம்.

சைகாலஜி முடிப்பருக்கு பள்ளிகள், மருத்துனைகள், சமூக சேவை நிறுனங்கள், மன நல மையங்கள், சிறப்புக் கல்வி மையங்கள், தொழிற்

கூடங்கள், வணிகத் துறை, அரசு மற்றும் தனியார் வேலை மையங்கள் ஆகிவற்றில் வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற படிப்புளைப் படிப்பவர்கள் வெறும் படிப்புடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறப்பான தகவல் தொடர்புத் திறன், பரலான பொது அறிவுத் திறன் ஆகிவற்றைப் பெற முயற்சித்தால் அதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us