முதலீட்டு வங்கியாளர் என்பவர்... | Kalvimalar - News

முதலீட்டு வங்கியாளர் என்பவர்...

எழுத்தின் அளவு :

முதலீட்டு வங்கியாளர் என்பவர், நிறுவனங்கள், அரசுகள் மற்றும் இதர அமைப்புகளுக்கு, முதலீட்டை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர் அல்லது அதே நோக்கத்திற்காக பெரிய வங்கிகளில் பணியாற்றும் ஒரு தனி மனிதர்.

இதுதவிர, தனது வாடிக்கையாளருக்காக, இணைப்பு மற்றும் ஒன்றை உரிமையாக்குதல் தொடர்பான விஷயங்களிலோ அல்லது குறிப்பிட்ட பரிமாற்ற நடவடிக்கைகளிலோ சேவைபுரியும் நபராக இருப்பார். சிறிய நிறுவனங்களில், குறிப்பிட்ட முதலீட்டு வங்கி அமைப்பு இருக்காது என்பதால், அங்கே முதலீட்டு வங்கியாளரின் பணியை, கார்பரேட் நிதி ஊழியர்(Corporate finance staff) மேற்கொள்கிறார்.

முதலீட்டு வங்கியாளர் பணி என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் நிதி வணிகத்தைக் கையாளும் மிக முக்கிய நபர்தான் (அந்நிறுவனத்தின் முதுகெலும்பு போன்றவர்) முதலீட்டு வங்கியாளர் எனப்படுபவர். பதிவுகளை(Records) பராமரித்தல், பதிவுகளில் மாற்றம் செய்தல், நிறுவனத்தினுடைய நிதி பரிமாற்றங்களை சோதித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அவர் மூளையாக செயல்படுகிறார்.

முதலீட்டு வங்கியாளரின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்

* முதலீட்டு வங்கித் துறையில் ஈடுபட்டிருக்கும் நபர்களுடனான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
* பல நிலைகளிலான நிதி பரிமாற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்
* வியூக மாற்றுகள், முதலீட்டு சந்தை நடவடிக்கைகள் மற்றும் பொது கார்பரேட் நிதி ஆகிய தலைப்புகளில், கிளையன்ட் சந்திப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டிய பிரசன்டேஷன்களை தயாரித்தல்
* Equity மற்றும் கடன் பரிமாற்றம் தொடர்பான செயலாக்கம் மற்றும் அறிமுகப்படுத்தல் ஆகியவற்றில் பங்காற்றுதல்
உள்ளிட்ட பல்வேறுபட்ட நிதி தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்.

இன்வெஸ்ட்மென்ட் பேங்கருக்கு தேவையான திறன்கள்

சிறந்த தொழில்நுட்பத் திறமைகள்
மக்கள் திறன்கள்
நெருக்கடியிலும் தடுமாற்றமில்லாது பணியாற்றும் திறமை
நல்ல கணித அறிவு
அற்புதமான நிதித்துறை அறிவு
விற்பனையில் நல்ல ஆற்றல்
வணிகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை கண்டறிதல் அல்லது உருவாக்குதல்
சர்வதேச சூழலில் பணியாற்றும் சாமர்த்தியம்
புதிய அம்சங்களை விரைவாக புரிந்து கற்கும் திறன்

இத்துறையில் நுழைதல்

ஆன்லைன் விண்ணப்பப் படிவம், எண் மற்றும் வார்த்தை பகுப்பாய்வு தேர்வுகள், முதல் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட பல படிநிலைகளை கடந்துதான் இந்த பணி வாய்ப்பை பெற முடியும். அதேசமயம், ஒரு முதலீட்டு வங்கியுடன் இன்டர்ஷிப் மேற்கொள்ளும்போது, இதற்கான பணி வாய்ப்பை பெறும் சூழல்கள் அதிகரிக்கின்றன.

சில முதலீட்டு வங்கிகள், தங்களிடம் இன்டர்ன்ஷிப் மேற்கொண்ட சிலருக்கு, முழுநேர பணி வாய்ப்புகளை அளிக்கின்றன. இதற்கான விண்ணப்ப செயல்பாடு, graduate scheme -களை ஒத்ததாகும். இறுதியாண்டிற்கு முந்தைய ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நீங்கள் விரும்பும் நிறுவனங்களில், பகுதிநேர பணி அல்லது விடுமுறை நாள் பணியை மேற்கொள்வது, பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.

பணி அனுமதி(work permit) தேவைப்படுகிற மாணவர்களிடமிருந்தும், சில முதலீட்டு வங்கிகள், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றன. தனி நிறுவனங்களில் இதை நீங்கள் சோதிக்க வேண்டும்.

ஒரு முதலீட்டு வங்கியாளர் ஆவதற்கு, இந்தியாவில் எங்கு படிக்கலாம்?

சென்னை பிசினஸ் ஸ்கூல் - சென்னை
ஐ.சி.எப்.ஏ.ஐ - திரிபுரா
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பேங்கிங் அன்ட் பைனான்ஸ்
ஐ.பி.எம் - புதுடில்லி
த ஸ்கூல் ஆப் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்
சேவியர் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் - புபனேஷ்வர்
எஸ்.பி. ஜெயின் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச் - மும்பை
வீர் நர்மாட் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம்
மவுன்ட் கராமல் பிசினஸ் ஸ்கூல் - புதுடில்லி
பிளான்மேன் சென்டர் பார் ஹையர் எஜுகேஷன் - புதுடில்லி

இத்துறை தொடர்பான பல்வேறு படிப்புகள்

முதலீட்டு வங்கியியல் மற்றும் Equity ஆராய்ச்சியில் டிப்ளமோ படிப்பு

முதலீட்டு வங்கியியலில் எம்.பி.ஏ. படிப்பு

செக்யூரிட்டி அனலிசிஸ், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் மற்றும் முதலீட்டு வங்கியியல் ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பு

செக்யூரிட்டி அனலிசிஸ், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் மற்றும் முதலீட்டு வங்கியியலில் இளநிலைப் படிப்பு

பைனான்ஸ் மற்றும் முதலீட்டு வங்கியியலில் பி.ஏ. படிப்பு

வங்கியியல் மற்றும் பைனான்ஸ் துறையில் முதுநிலை டிப்ளமோ

முதலீடு மற்றும் வணிக ஆராய்ச்சியில் முதுநிலை டிப்ளமோ

உலகளாவிய முதலீட்டில் முதுநிலை டிப்ளமோ

சம்பளம்

இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துள்ள ஒரு முதலீட்டு வங்கியாளருக்கான குறைந்தபட்ச சராசரி ஊதியம் ஆண்டிற்கு, ரூ.7 முதல் ரூ.8 லட்சங்கள் வரையாகும்.

வாய்ப்புகள்

இந்திய இளைஞர்களின் மத்தியில், முதலீட்டு வங்கியியல் என்பது, மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்கிறது. இத்துறையின் நிபுணர்களுக்கு பரவலான பணி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணைபுரியும் முதலீட்டு வங்கியாளர், வங்கிகளுக்கு எப்போதுமே தேவைப்படும் ஒரு முக்கிய நபராக இருக்கிறார். தராளமய பொருளாதார உலகில், முதலீட்டு வங்கியாளருக்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம்தான் இருக்குமே ஒழிய, என்றுமே குறையாது என்றே தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us