எக்சிகியூடிவ் கான்ஸ்டபிள் என்று அழைக்கப்படும் இந்தப் பணியிடங்களுக்கு ஆண் பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதைத் தவிர கான்ஸ்டபிள் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களும் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கக் கனரக வாகன லைசென்ஸ் பெற்றிருப்பது அவசியம்.
அடிப்படையில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதும் 18 முதல் 27 வயதுக்குள் இருப்பதும் அவசியம். வழக்கமான வயது வரம்பு தளர்வு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்குத் தரப்படும். ஆண்கள் குறைந்தது 165 செ.மீ., உயரமும் பெண்கள் 150 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தது 50 கிலோ எடையும் பெண்கள் 39.5 கிலோ எடையும் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக எழுத்துத் தேர்வு, உடற்திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இறுதியாக மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.