உடற்கூறியல் | Kalvimalar - News

உடற்கூறியல்

எழுத்தின் அளவு :

உடற்கூறியல் என்பது உயிரியல் மற்றும் மருத்துவம் கலந்த அறிவியல் துறை. இதில் உடலில் உள்ள உறுப்புகளின் கட்டமைப்புகளை பற்றி விரிவாக படிக்கலாம். பொதுவாக விலங்கு உடற்கூறியல் (ஜுடோமி), தாவர உடற்கூறியல் (பைடோமி) என வகைப்படுத்தலாம். உடற்கூறியல் மாக்ரோஸ்கோபிக் அனாடமி மற்றும் மைக்ரோஸ்கோபிக் அனாடமி என இரண்டு உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. வெறும் கண்களால் உடல் உறுப்புகளின் கட்டமைப்புகளை ஆராய்ந்து படிப்பது மாக்ரோஸ்கோபிக் அனாடமி எனப்படும். மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் செல்லின் கூறுகளை ஆராய்ந்து படிப்பது மைக்ரோஸ்கோபிக் அனாடமி எனப்படும். நெஞ்சு முதல் தலைபாகம் வரை அமைந்துள்ள உறுப்புகள் பற்றி படிக்கலாம். நரம்பு மண்டலம், செரிமான மண்டலம் போன்ற உடலுறுப்பு மண்டலங்களைப் பற்றியும் இத்துறை விளக்குகிறது. பல கல்வி நிறுவனங்கள் இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. பயிலும் நிறுவனங்கள் * சென்னை பல்கலைக்கழகம், சென்னை (தீதீதீ.தணணிட்.ச்ஞி.டிண) * சவிதா மருத்துவக் கல்லூரி, சென்னை (தீதீதீ.ண்ச்திஞுஞுtடச்.ஞிணிட்) * எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி, சென்னை (தீதீதீ.ண்ணூட்தணடிதி.ச்ஞி.டிண) * அமிர்தா மருத்துவக் கல்விநிறுவனம், கொச்சி (தீதீதீ.ச்டிட்ண்டணிண்ணீடிtச்டூ.ணிணூஞ் ) * மணிப்பால் பல்கலைக்கழகம், மணிப்பால் (தீதீதீ.ட்ச்ணடிணீச்டூ.ஞுஞீத) *கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி, கேரளா (ஞிச்டூடிஞிதtட்ஞுஞீடிஞிச்டூஞிணிடூடூஞுஞ்ஞு.ச்ஞி.டிண)

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us