வங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை? | Kalvimalar - News

வங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை?செப்டம்பர் 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் நீங்கள் போட்டித் தேர்வுகள் பற்றி அறியாமலிருப்பது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வங்கிப் பணியிடங்கள் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்படுகிறது. கல்வித் தகுதிகள் என்பவை ஒரு தேர்வை நீங்கள் எழுதும் தகுதியை மட்டுமே தருகிறது.

ஐ.டி., தகுதிகளைப் பெற்றிருப்பவருக்கு சில இடங்களில் போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடித்தேர்வு மட்டுமே நடத்தப்படுவதை மட்டும் காண்கிறோம். எனவே எந்த வங்கியின் கிளார்க்/பி.ஓ., பணிகளுக்கும் குறிப்பிட்ட தகுதியுடையவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என்றெல்லாம் தயவு செய்து நினைக்க வேண்டாம். பொதுவாக அரசு வங்கிகளின் கிளார்க் பணிகளுக்கு பிளஸ் 2 தகுதியும் பி.ஓ., பணிக்கு பட்டப்படிப்பு தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் திறன்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us