நெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

நெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும். செப்டம்பர் 19,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

முற்றிலும் டெக்னிகல் துறை இது. இன்றைய நவீன உலகில் அதிகம் தேவைப்படும் கனெக்டிவிடிக்கு மிகவும் நெருங்கிய உ றவைக் கொண்டது நெட்வொர்க்கிங். எனவே இதில் மிகுந்த திறனைக் கொண்டவர் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார். நடைமுறை அனுபவத்தைப் பெற்றிருக்கும் ஒருவர் தனக்குக் கீழ் செயல்படும் சில டெக்னீசியன்களைக் கொண்டு மிகவும் வெற்றிகரமாக இதில் செயல்படலாம்.


நெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் என்பது பின்வரும் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.


நெட்வொர்க்கிங் அட்மின்: லேன், வான், வி.பி.என். ஆகிய நெட்வொர்க்குகளை நிர்வகிப்பதை இது குறிக்கிறது. தொலைதூரத்திலிருந்தபடியே நமது நிறுவனத்தின் நெட்வொர்க்குகளை நிர்வகிப்பது இன்று சாதாரணமாக நாம் பார்க்கக்
கூடியதாக இருக்கிறது. விண்டோஸ் என்.டி., நாவல், யுனிக்ஸ், லினக்ஸ் போன்றவற்றின் நுணுக்கங்களை நன்றாக அறிந்திருப்போருக்கு இது எளிதான பணியாக மாறிவிடுகிறது.


நெட்வொர்க் டெக்னீசியன்/சர்விஸ் டெக்னீசியன் ஆகியோர் ஹார்ட்வேர்/சாப்ட்வேர் பிரச்னைகளை களைவது மற்றும் சப்போர்ட் பணிகளை முறையே செய்கிறார்கள். இது போலவே நெட்வொர்க் புரொகிராமர், அனலிஸ்ட், நெட்வொர்க் மேனேஜர், நெட்வொர்க் செக்யூரிடி போன்ற பணிகளையும் இத்துறையினர் மேற்கொள்கிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us