காப்பீட்டுத்துறை அறிவியல் | Kalvimalar - News

காப்பீட்டுத்துறை அறிவியல்

எழுத்தின் அளவு :

இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு கணிதம் மற்றும் புள்ளியியல் வழிமுறைகளை பயன்படுத்தி தீர்வு காணும் துறையே காப்பீட்டுத்துறை அறிவியல். இப்படிப்பு வாழ்க்கைத் தொழில் (புரொபசனல்) படிப்புகளின் கீழ் உள்ளது. இத்துறை நிபுணர்கள் காப்பீட்டு மதிப்பாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் சில வெளிநாடுகளில் இத்துறை நிபுணர்கள் தொடர்ச்சியான தேர்வுகளை எழுதி, அதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தங்கள் தகுதியை பறைசாற்றுகின்றனர். இத்துறை நிகழ்தகவு, புள்ளியியல், நிதி, பொருளியல் என சில உட்பிரிவுகளை கொண்டது. காப்பீட்டுத்துறை அறிவியல் துறையில் படிப்பை முடித்தவர்கள், இன்சூரன்ஸ் தொழிலை நடத்துவதற்கேற்ப பிரீமிய விகிதங்களை நிர்ணயிப்பது, கூடுதல் பிரீமியத்தை தேவைக் கேற்ப பெறுவது, புதிய இன்சூரன்ஸ் திட்டங்களை வடிவமைப்பது போன்ற பணிகளைச் செய்கிறார்கள். இன்சூரன்ஸ் தொடர்பான படிப்புகளில் இதுவே மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்துறையானது லைப் இன்சூரன்ஸ், பென்ஷன், ஹெல்த்கேர் மற்றும் சில சமூக நல பிரிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உயிர், விபத்தினால் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தீ, திருட்டு, கடல் வழி சரக்குப் பரிமாற்றம் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் போன்றவற்றை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நிர்வகிக்கின்றன. ஹெல்த் இன்சூரன்சில் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் அளித்திடவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பென்சன் பிரிவில் பல விதமான பென்சன் திட்டங்களை திட்டமிடுதல், காத்தல் , மறுதிட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில், தலைமை காப்பீட்டு மதிப்பாளர் அலுவலகம் (ஓ.சி.ஏ.சி.டி.,) மற்றும் சமூக நல வாரியங்கள் பல முன்னேற்றங்கள் ஏற்பட வழிவகுக்கின்றன. இன்னும் பிரபலமாகாத இத்துறை, வேலைவாய்ப்புகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்துகின்றது. படிப்புகள் மற்றும் பயிலும் நிறுவனங்கள்: இத்துறையில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன. * சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (டttணீ://தீதீதீ.தணணிட்.ச்ஞி.டிண/டிணஞீஞுது.டtட்டூ) * பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி (டttணீ://தீதீதீ.ஞடஞி.ச்ஞி.டிண/) * அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் (டttணீ://ச்ணணச்ட்ச்டூச்டிதணடிதிஞுணூண்டிtதூ.ச்ஞி.டிண) * அமைட்டி ஸ்கூல் ஆப் இன்சூரன்ஸ் மற்றும் ஆக்சுவரியல் சயின்ஸ் (தீதீதீ.ச்ட்டிtதூ.ஞுஞீத) * பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி, புதுடில்லி (தீதீதீ.ஞடிட்tஞுஞிட.ச்ஞி.டிண) * டி.எஸ்.ஆக்சுவரியல் கல்வி நிறுவனம், மும்பை (தீதீதீ.ஞீண்ச்ஞிtஞுஞீ.ஞிணிட்) * நர்சி மான்ஜி மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (தீதீதீ.ணட்டிட்ண்.ஞுஞீத) * மும்பை பல்கலைக்கழகம், மும்பை (தீதீதீ.ட்த.ச்ஞி.டிண) * டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி (தீதீதீ.ஞீத.ச்ஞி.டிண) வேலைவாய்ப்புகள் இத்துறையில் படிப்பை முடித்தவர்கள், எல்.ஐ.சி.,, ஜி.ஐ.சி.,, இ.எஸ்.ஐ.சி.,, வங்கிகள், பங்குச்சந்தை மற்றும் நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியில் அமரலாம். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் குறைந்த பட்சம் ரூ. 8,000 முதல் ரூ.16,000 வரையிலும், தனியார் துறையில் பணியில் உள்ளவர்கள் ரூ.15,000 முதல் 25,000 வரையிலும் ஊதியம் பெறலாம். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இப்படிப்பை முடித்தவர்களுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us