இந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

இந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும். ஆகஸ்ட் 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இயற்கையும் நாட்டின் பாதுகாப்பும் அழைத்தவுடன் உடனே வந்து நிற்பது ராணுவத்தினர் தான் அல்லவா? தியாகத்தையும் சேவையையும் அடக்கியுள்ள மகத்தான தேசத் தொண்டு புரியும் வாய்ப்பை ராணுவப் பணி வாய்ப்புகள் தான் தருகின்றன. ஆனால் தற்போது இந்திய ராணுவத்தில், குறிப்பாக இந்திய தரைப்படையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக சமீபத்தில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் தரைப்படை எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

தரைப்படையில் ஒருவர் 2 வழிகளில் அதிகாரியாகப் பணியில் சேரலாம். முதலாவது நிரந்தர கமிஷன். தரைப்படையில் சேரும் ஒருவர் ரிடையர் ஆகும் வரை பணி புரிவதை இது குறிக்கிறது. இப்படி நிரந்தரப் பணியில் சேர என்.டி.ஏ., ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ. ஆகியவற்றின் மூலமாக மட்டுமே ஒருவர் சேர முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்த பதவி உயர்வைப் பெறலாம். 2 ஆண்டுப் பணியின் பின் லெப்டினன்டாகவும், 4 ஆண்டுப் பணிக்குப் பின் கேப்டனாகவும், 13 ஆண்டுப் பணிக்குப் பின் மேஜராக பதவி உயர்வுகளைப் பெறலாம். தங்குமிடம், உணவு, கிளப் மெம்பர்ஷிப், மானியத்தோடு கூடிய உயர் கல்வி வாய்ப்பு என உலகத் தரத்தில் தரைப்படை அதிகாரிகள் பணிக்குப் பிந்தைய பணிச் சூழலைப் பெறுகிறார்கள்.

2ம் வழியான குறுகிய கால கமிஷன் பணிவாய்ப்பும் தரைப்படையில் இருக்கிறது. இதன்படி ஒருவர் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்
- பணியிலிருந்து விலகலாம்
- பணியை நீட்டித்துக் கொள்ளலாம். அதன் பின் எப்போது வேண்டுமானாலும் பணி விலகலாம்.
- நிரந்தர கமிஷன் பணிக்கும் மாறிக் கொள்ளலாம்.

ஓ.டி.ஏவில் பயிற்சிக்குப் பின் குறுகிய கால கமிஷன் பணியில் ஒருவர் சேரலாம். இப்படி அதிகாரியாக நுழைவது தவிர பிற பணி நிலைகளிலும் ஒருவர் தரைப்படைப் பணியில் சேர முடியும். பெரும்பாலான தரைப்படை வாய்ப்புகள் சாதாரண சிப்பாய் மற்றும் சோல்ஜர் நிலை வாய்ப்புகளாகவே இருக்கின்றன. இவற்றுக்கு ரேலி எனப்படும் முறையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். டெக்னிகல் சோல்ஜர், சாதாரண சோல்ஜர், கிளார்க், ஸ்டோர்கீப்பர், நர்சிங் அசிஸ்டன்ட் ஆகிய பணிகளுக்கு 10ம் வகுப்பு தகுதி இருந்தால் போதும்.

நல்ல உடற்தகுதிகளைப் பெற்றிருப்பவர் இது போன்ற வாய்ப்புகளுக்குத் தவறாது விண்ணப்பித்தால் மிகச் சிறந்த வாய்ப்பையும் மன திருப்தியையும் கட்டாயம் பெற முடியும். தரைப்படையும் சரி ராணுவத்தின் பிற பிரிவுகளும் சரி இப்போது இது போன்ற இளைஞர்களை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us