பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனக்கான வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனக்கான வாய்ப்புகள் எப்படி?ஆகஸ்ட் 22,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

கப்பற்படையிலும் விமானப்படையிலும் உங்களது தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளன.
கப்பற்படை: யுபிஎஸ்சி நடத்தும் என்டிஏ தேர்வு மூலமாக பணிகளுக்குச் செல்லுதல் (16.5 முதல் 19 வயதுக்குள்-இயற்பியல் வேதியியல் கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் 50 சதவீதமாவது எடுத்திருக்க வேண்டும்) என்டிஏ மூலமாக மரைன் இன்ஜினியர்ஸ் பணிக்குச் செல்லுதல் (16.5 முதல் 19 வயதுக்குள்-இயற்பியல் வேதியியல் கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் 50 சதவீதமாவது எடுத்திருக்க வேண்டும்) நேவல் ஆர்க்கிடெக்ட் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவில் இன்ஜினியர்கள் (கேடட் நுழைவு முறை) (16.5 முதல் 19 வயதுக்குள்-இயற்பியல் வேதியியல் கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் 50 சதவீதமாவது எடுத்திருக்க வேண்டும்).

விமானப்படை: யுபிஎஸ்சி நடத்தும் என்டிஏ தேர்வு மூலமாகப் பயிற்சி பெற்று (3 ஆண்டுகள்) பின் பணியில் மற்றொரு பயிற்சி மூலமாகவும் சேரலாம். 16.5 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2ல் கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும். ஏர்மென் டெக்னிகல் டிரேட் பணிக்கு பிளஸ் 2ல் கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும். 15 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us