இந்தியாவின் முக்கிய மெடிக்கல் நுழைவுத் தேர்வுகளில் ஒன்று ஆல் இந்தியா பிரீ மெடிக்கல் தேர்வு. இந்தியாவிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்கள் இத்தேர்வில் வெற்றிபெறுபவரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இது முதனிலைத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப் படுகிறது. முதனிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வை எழுத முடியும்.
இத்தேர்வை யார் எழுதலாம்? குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அல்லது எம்.பி.பி.எஸ்./பி.டி.எஸ். படிப்பில் சேரவிரும்பும் ஆண்டில் டிசம்பர் 31ந்தேதிக்குள் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக தேர்வு எழுதும் ஆண்டில் டிசம்பர் 31ந் தேதியன்று 25 வயதுக்கு மிகாமலிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும்.
பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் அல்லது ஒரு பிற விருப்பப் பாடத்தைப் படித்திருக்க வேண்டும். என்.சி. இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ள படி ஆங்கிலத் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு பற்றிய சில தகவல்களைத் தருகிறோம். சி.பி.எஸ்.இ.-அகில இந்திய பிரீ மெடிக்கல் தேர்வுகள் பொதுவாக முதனிலைத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முக்கியத் தேர்வில் தனித்தனியாக தலா 2 மணி நேரத்துக்குள் 2 தாள்களை எழுத வேண்டும்.
முதல் தாளில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும். 2ம் தாளில் தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். முக்கியத் தேர்வில் விரிவாக விடையளிக்கும் பகுதியும் இடம் பெறும்.
இத்தேர்வு பற்றிய விபரங்களை
தேர்வு ஆணையத்தின் தென் மண்டல முகவரி
CBSE,
PLOT NO.1630A "J" BLOCK
15TH MAIN ROAD
ANNA NAGAR WEST
CHENNAI.
தொலைபேசி: 91-44-26162214/26162213.