இன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன். | Kalvimalar - News

இன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன். ஜூலை 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங்கைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் புதிது புதிதாக பல படிப்புகள் வந்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவில் சிறப்பான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் படிப்பு எது என்றால் பொத்தாம் பொதுவாக இன்ஜினியரிங் படிப்பு எனக் கூறலாம். பிற படிப்புகளைப் படிப் பவரோடு ஒப்பிடுகையில் இன்ஜினியரிங் அடிப்படைகளைப் படித்திருப்பவர் எதையும் எளிதாக புரிந்து கொள்வார் என்பது கல்வியாளர்களின் நம்பிக்கை.

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், நியூக்ளியர் என இன்ஜினியரிங் படிப்புகள் சிறகடித்து விரிந்துள்ளன. இத் துறையில் ஒருவர் மிளிர அடிப்படையில் அவருக்குத் தேவையானது பகுத்தாராயும் மற்றும் தொழில்நுட்பத் திறன். இதில் சிலவற்றை படிப்பும் பிறவற்றை அவரது இயல்பான ஆர்வமும் கற்றுத் தரும். எனவே இன்ஜினியரிங் படிப்பை மற்றுமொரு படிப்பாக மட்டும் படிக்காமல் அதற்குத் தேவையான உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் கடின உழைப்போடும் படித்தால் கட்டாயம் இதில் சிறப்பாக உருவாக முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us