ஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.ஜூலை 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய கால கட்டத்திற்கேற்ப வேகமாக வளரும் துறைகளில் ஒன்று ஹாஸ்பிடாலிடி துறை. 2010ம் ஆண்டில் இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியை அதிகமாக சம்பாதித்துத் தரும் துறையாக இது விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9வது ஐந்தாண்டு திட்டத்தின் மதிப்பீட்டின் படி இந்தியாவில் இத் துறைக்கு 30 ஆயிரம் பேர் பற்றாக்குறையாக இருப்பதாக கணக்கிடப்பட்டது.

ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகள், பாஸ்ட் புட் உணவகங்கள், கேட்டரிங் நிறுவனங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள்,பெரிய அலுவலகங்களின் கேன்டீன்கள், ஆஸ்பத்திரிகள், ஹாஸ்டல்கள், ரிசார்ட்டுகள், கெஸ்ட் ஹவுஸ்கள், லாட்ஜ்கள், கேசினோக்கள், கிளப்புகள், ஸ்பாக்கள் ஆகியவற்றில் ஹாஸ்பிடாலிடி படித்தவருக்கான தேவை இப்போது கடுமையாக உள்ளது.

ஹாஸ்பிடாலிடி துறையில் பின்வரும் பணிப் பிரிவுகள் உள்ளன. ஹவுஸ்கீப்பிங் - இந்த பணிக்கு ஹாஸ்பிடாலிடி டிப்ளமோ படித்திருப்பவரை இப்போது பல நிறுவனங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேசத் தெரிவது மிக அவசியம். இவர்களுக்கு பன்முகத் திறன்கள் தேவைப்படுகிறது. ஹார்ட்டிகல்ச்சர், லாண்டரி, இன்டீரியர், விருந்தினர் வருகை மற்றும் கவனிப்பு போன்ற பணிகளையும் இவர்கள் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் ஹவுசிங் சொசைட்டிகளும் ஹவுஸ்கீப்பர்களை அதிகமாக நாடுகின்றன.

குக்கரி - நல்ல ஓட்டல்களில் தான் நல்ல செப் (தலைமை சமையல்காரர்) பணிக்குச் செல்ல முடியும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் நல்ல செப்தான் சிறப்பான ஓட்டலாக எதையும் மாற்றுகிறார்கள். கிரியேடிவாகவும் உணர்வுபூர்வமாகவும் புதுப் புது பதார்த்தங்களை ஆர்வத்துடன் செய்து தரும் சமையல்காரர்கள் ஹாஸ்பிடாலிடி துறையின் உயிர்நாடியாக விளங்குகிறார்கள். இவர்களுக்கு இப்போது விமான சர்விசுகள், ஹாஸ்பிடல் கேட்டரிங், புட் ஸ்டைலிங், கேட்டரிங், ரெஸ்டாரன்டுகள், சுற்றுலா கப்பல்கள் போன்ற இடங்களில் கடுமையான தேவை இருக்கிறது.

கிச்சன் ஸ்டியூவரி, பேக்கரி - பெரிய மற்றும் நவீன சமையலறைகளில் முன்பு செப்கள் செய்து வந்த பல பணிகளை இப்போது கிச்சன் ஸ்டூவர்ட்டுகள் செய்கிறார்கள். உணவு வகைகளை அரேஞ் செய்வது, சரக்குகளை கணக்கில் வைத்துக் கொள்வது, பல பொருட்களை செய்வதற்கு உதவும் உபகரணங்களை பராமரிப்பது மற்றும் நிர்வகிப்பது,கிச்சனில் சுகாதாரத்தையும் சுத்தத்தையும் உறுதி செய்வது, சேதமடைந்த பொருட்களை குறித்துக் கொள்வது என இவர்களின் பணியும் பன்முகம் கொண்டதாக இருக்கிறது.
பேக்கரி பொருட்களுடன் ஒரு நாளை தொடங்கி அதோடு முடிப்பவர் பலரை நாம் இப்போதெல்லாம் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. அக்கவுன்டன்ட் - அக்கவுன்டிங் முறைகளோடும் கம்ப்யூட்டர்களோடும் பரிச்சயமானவருக்கான பணி இது. ஹாஸ்பிடாலிடி துறையில் இதுவும் இப்போது ஒரு முக்கியப் பணியாக விளங்குகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us