சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். நல்ல வேலை பெற என்ன செய்ய வேண்டும்? | Kalvimalar - News

சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். நல்ல வேலை பெற என்ன செய்ய வேண்டும்?ஜூலை 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

நல்ல திறமை உள்ள நம் ஊர் இளைஞர்களின் பிரச்னை என்னவென்றால் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று பணி புரிய அவர்கள் தயாராக இருப் பதில்லை.

சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கும் உங்கள் நண்பர் வடமாநிலங்களில் உள்ள சிவில் கான்ட்ராக்டுகளில் பணி புரிவதை விட கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் ஈடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங் களில் பணி புரிய செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நல்ல சம்பளத்துடன் வளமையான அனுபவத்தை இது போன்ற நிறுவனங்களில் பணி புரியும் போது தான் பெற முடியும்.

நவீன தொழில் நுட்பம், லேட்டஸ்ட் உபகரணங்கள், நல்ல சம்பளம் என எதிர்காலத்திற்கு பயன்படும் அத்தனை கூறுகளும் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட இதில் கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே, அது மிகப் பெரிய பலமாக அமைந்து விடும். 4 அல்லது 5 ஆண்டுகள் கழித்து உங்கள் நண்பர் தமிழ்நாட்டிலேயே வேலை பெற முயற்சிக்கும் போது இந்த அனுபவம் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கும்.

இது போன்ற அருமையான அனுபவம் பெறும் கால கட்டத்தில், டிசைனிங் போன்றவற்றில் நவீன சாப்ட் வேர்களையும் அறிந்து கொண்டு அடிப்படை தகவல் தொடர்புத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us