கடந்த சில ஆண்டுகளாகவே மல்டிமீடியா துறை அதிக வளர்ச்சியை கொண்டிருக்கும் துறையாக விளங்குகிறது. இதை முறையாகவும் திறமையாகவும் படிப்பவருக்கு நல்ல வேலை பெறுவதற்கான திறன்கள் அதிகம் கிடைக்கின்றன. திறன்அதிகமாகப் பெற்றவருக்கு கூடுதல் சம்பளமும் கிடைக்கிறது.
பொழுதுபோக்குத் துறை, விளம்பரம், பிரின்ட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா என பல துறைகளிலும் மல்டிமீடியா படிப்பவருக்கான தேவை அதிகம் இருக்கிறது. இதனால் பட்டப்படிப்பு அல்லது பிளஸ் 2 முடிப்பவர் அதிக எண்ணிக்கையில் இதை கற்றுக் கொள்ள வருகின்றனர்.
மல்டிமீடியா படிப்புகள் இப்போதெல்லாம் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சமமாக கருதப்படுவதையும் காண்கிறோம். மல்டி மீடியா படிப்புகளில் பெறும் திறன்களும் நுட்பமும் 2டி, 3டி உருவாக்கம், இன்டீரியர் டிசைன், பேக்கிரவுண்ட், போர்கிரவுண்ட், ஸ்டோரிபோர்ட், திரைப்படங்கள் என பல மீடியாவின் பல துறைகளுக்கும் தேவைப்படுகிறது. பப்ளிசிங் நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், டிசைன் ஸ்டுடியோ போன்றவற்றிலும் மல்டிமீடியா திறன் பெற்றவருக்கு எக்கச்சக்கமான தேவை இருக்கிறது. இந்த வாய்ப்புகளைத் தாண்டி மல்டிமீடியாவில் பணி புரிபவர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்தோடும் இதை தொடர்ந்து கற்றுக் கொள்ள முடிவது தான் இதன் சிறப்பம்சம்.