இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்?ஜூலை 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னையிலுள்ள ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் என்னும் சிறப்புப் பயிற்சி நிறுவனம் இதழியல் துறையில் இந்தியாவில் மிகச் சிறப்பான கல்வி நிறுவனம் என அறியப்படுகிறது. நுழைவுத் தேர்வு மூலமாக இதன் படிப்புகளில் சேரலாம். இத்தேர்வில் ஒருவருடைய ஆங்கிலத் திறன், நடப்புச் செய்திகள் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் ஒருவருக்குள்ள ஞானம் ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. மேலும் ஒருவரின் எழுத்துத் திறமை, எதையும் தெளிவாக எடுத்துச் சொல்லும் ஆர்வம் மற்றும் பாங்கு, பிரச்னைகளை அடையாளம் காணும் திறன் மற்றும் தீர்வுகளை எடுத்துக் கூறும் தெளிவு ஆகியவையும் பரிசோதிக்கப்படுகின்றன.

இந்தக் கல்லூரியின் படிப்புகள்

* பிரின்ட் மீடியா
* நியூ மீடியா
* டிவி மீடியா
* ரேடியோ மீடியா

ஆகிய 4 முக்கியப் பிரிவுகளில் சிறப்புப் படிப்புகளாக ஒவ்வொன்றும் நடத்தப்படுகிறது.

பன்னாட்டு புகழ் பெற்ற பி.பி.சி., ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசத்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் சேர்ந்து படிப்பவர்களில் மிகச் சிறப்பாகப் படிப்பவர்களுக்கு தெற்காசிய கூட்டமைப்பின் உதவித் தொகையும் கிடைக்கிறது. இதன் படிப்புகளுக்கான அறிவிப்பு பொதுவாக ஜனவரி முதல் ஏப்ரலுக்குள் வெளியிடப்படுகிறது. மிகுந்த சவாலாகவும் ஆர்வத்தைத் துõண்டுவதாகவும் இத் துறை விளங்குவதால் நிச்சயம் இதை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள்.


 

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us