தொலைதூரக்கல்வியில் மனித உரிமை படிப்பைப் படிக்கலாமா? | Kalvimalar - News

தொலைதூரக்கல்வியில் மனித உரிமை படிப்பைப் படிக்கலாமா? ஜூலை 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த பல ஆண்டுகளாகவே உலகெங்கும் மனித உரிமைகள் என்பது வெகு பரவலாக அறியப்படுவதாக மாறியிருக்கிறது. வேகமாக வளரும் பொருளாதாரச் சூழல் ஒரு புறம் என்றால் மறுபுறம் மனித உரிமை மீறல்கள் என்பது சாதாரணமான நிகழ்வாகக் காணப்படுகிறது.

எனவே மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப்பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத்துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள்.

எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப்பிரிவில் 2 ஆண்டு பட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதுபற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net

இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.

விண்ணப்பம் பெறும் முகவரி:
Indian Institute of Human Rights,
A16, Paryavaran Complex, (HT),
SaketMaidangarhi Marg,
New Delhi – 110 030.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us