உலகம் முழுவதும் நிலவும் மந்தமான பொருளாதாரச் சூழலை அறிந்திருப்பீர்கள். மியூச்சுவல் பண்ட் துறையும் லேசான பின்னடைவை சந்தித்திருப்பதாக வல்லுனர்கள் கருதுகிறார்கள். பண்ட் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ், கஸ்டடியன் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் என இத்துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மியூச்சுவல் பண்டுகளை விற்க அசோசியேஷன் ஆப் மியூச்சுவல் பண்ட் என்னும் அமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இதில் தேர்ச்சி பெற்றால் மியூச்சுவல் பண்ட் அட்வைசராக நீங்கள் சான்றிதழ் பெற்று பணியாற்றலாம். இதன் பின் கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்விசஸ், இந்தியா குரோத் பண்ட், எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட் என எத்தனையோ மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் களத்தில் இருப்பதால் உங்களால் இவற்றில் வேலை பெற முடியும்.
இவற்றில் பண்ட் மேனேஜ்மென்ட், ஈக்விடி ரிசர்ச், பைனான்சியல் மாடலிங், மியூச்சுவல் பண்ட் டிஸ்டிரிபியூஷன், கம்ப்ளையன்ஸ் என இவற்றில் இத்தகுதி பெறுபவருக்கான எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் மார்க்கெட்டிங் பணியில் சேர விரும்பினால் அதில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. நேரடியாக இவற்றை விற்பது உட்பட, ஏஜென்டுகள் மூலமாக விற்பனையை நிர்வகிப்பது போன்ற பணிகள் அதிகம் இருக்கின்றன. எனவே உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்வு செய்யலாம்.