ஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா? | Kalvimalar - News

ஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா? ஜூலை 12,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

தேசிய ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனமான NATA  தனது பட்டப்படிப்புக்கான பொதுநுழைவுத் தேர்வை நடத்துகிறது. பிளஸ் 2ல் கணிதம் மற்றும் இயற்பியலை படித்து சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பைத் தரும் பல கல்வி நிறுவனங்களின் படிப்புகளிலும் சேர முடியும்.

இந்தத் தேர்வானது 2 பகுதிகளைக் கொண்டது. டிராயிங் மற்றும் அழகுணர்ச்சித் திறனறியும் 2 பகுதிகள் இவை. இந்தியாவில் உள்ள பல மையங்களில் இந்தத் தேர்வானது நடத்தப்படும். முழு விபரங்களை அறியும் தள முகவரி: www.nata.in


 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us