பார்மா துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. உங்களது படிப்பை ஏனோதானோவென்று முடித்திருக்காமல் ஓரளவு பாடத்திறன் பெறும் விதத்தில் முடித்திருந்தால் நீங்கள் இத்துறையில் சிறப்பான வாய்ப்புகளைப் பெற முடியும்.
கெமிஸ்ட்/பார்மசிஸ்ட் போன்ற பணிகள் உங்களது தகுதிக்கானவை. தனியார் மருந்துத் தயாரிப்பகங்களில் உங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் அரசுத் துறையிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பிற மருந்தகங்களிலும் நீங்கள் வாய்ப்புகளைப் பெறலாம். தனியாக மருந்துக் கடைகளையும் நீங்கள் நிறுவலாம்.