எம்.பி.ஏ., படிப்பில் நிதி மேலாண்மை படித்துள்ள நீங்கள் இது தொடர்பாக கூடுதல் தகுதி எதுவும் பெறத் தேவையில்லை. எம்.பி.ஏ., தகுதிக்கேற்ற மேலாண்மைத் திறனும் மென்திறன்களும் பெற்றுள்ளீர்களா என்பது தான் முக்கியம். இதைப் பெறாதவராக நீங்கள் இருந்தால் இதைப் பெற முயற்சிப்பது மிக அவசியம்.
பிற தகுதிகளை உடையவரைவிட உங்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் உங்களது பாடத் திறன், மொழித் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றை நீங்கள் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல சி.ஏ., சி.எப்.ஏ., போன்ற தகுதிகளைப் பெற இன்னமும் அதிக காலம் ஆகும். அது கால விரயத்தை உங்களுக்கு ஏற்படுத்தும்.