கேபின் குரூ (இச்ஞடிண இணூஞுதீ) எனப்படும் விமானப் பணிகள் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

கேபின் குரூ (இச்ஞடிண இணூஞுதீ) எனப்படும் விமானப் பணிகள் பற்றிக் கூறலாமா?ஜூன் 27,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

விமானத்தோடு தொடர்புடைய பிளைட் சூப்பர்வைசர், பர்சுவர், ஏர்ஹோஸ்டஸ், பிளைட் அட்டென்டண்ட் ஆகிய பணிகளை மொத்தமாக கேபின் குரூ என அழைக்கின்றனர்.

விமானப் பயணிகளின் சொகுசான பயணத்தையும் அதில் அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது இவர்கள் தான். பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதிப்பது, லக்கேஜ்களை பத்திரமாக விமானத்தில் வைப்பது, சீட்பெல்ட் பயன்பாட்டை விளக்குவது, அவசரகால கருவிகளின் பயன்பாட்டை தெரியப்படுத்துவது, அவசர கால கதவு பயன்பாட்டை உறுதி செய்வது போன்ற பல்வேறு விதமான பணிகளை இவர்கள் செய்கின்றனர்.

பயணத்தின் போது பயணிகளுக்குப் போதுமான உணவு, குளிர்பானம், பிற மென் பானங்கள், முதலுதவிக் கருவிகள் போன்றவற்றை இவர்கள் தான் உறுதி செய்கின்றனர். திடீரென பயணிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அதற்குத் தேவைப்படும் மருந்துப் பொருட்களையும் சேவையையும் தரக்கூடியவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

பொதுவாக கேபின் குரூ படிப்புகளுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தகுதி பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பாகும். 17 முதல் 27 வயதுக்குள் இருப்பவர் இப்படிப்புகளை மேற்கொள்ளலாம். சிறப்பான உடற் தகுதிகளும் இதற்குத் தேவைப்படுகின்றன.

குறைந்தது 157.5 செ.மீ., உயரம் இருப்பது இதற்கு வலியுறுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்களையே பொதுவாகப் பல விமான நிறுவனங்களும் பணியில் அமர்த்துகின்றன. ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, சகாரா என பல்வேறு விமான சேவை நிறுவனங்களிலும் தற்போது இப்படிப்பை முடிப்பவருக்கான வாய்ப்புகள் உள்ளன. சில பயிற்சி நிறுவனங்களை கீழே குறிப்பிடுகிறோம்.

Indian Airlines Ltd. Central Training Establishment, Hyderabad;
Delhi Flying Club Ltd, New Delhi;
Sahara India Aviation Academy, New Delhi;
Skyline Educational Institute, New Delhi;
Flytech Aviation Academy, Secunderabad;
Indian Aviation Academy, Mumbai;
Kuoni Academy of Travel, Delhi;
Air Hostess Academy, Delhi;
Frankfinn Management Consultants, Delhi
Freebird Aviation & Management Services, Trivandrum.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us