சமூக மாற்றத்திற்கான ஊக்கத்தொகை | Kalvimalar - News

சமூக மாற்றத்திற்கான ஊக்கத்தொகை

எழுத்தின் அளவு :

இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு பங்களிக்க ஊக்குவிக்கும் வகையில், இன்லாக்ஸ் ஷிவ்தாசனி பெல்லோஷிப்- 2024 திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.முக்கியத்துவம்


பொருளாதார அழுத்தத்தின் காரணமாக, இளம் பட்டதாரிகள் உடனடியாக வேலையில் சேர வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள விதிமுறை. இது பல திறமையான நபர்கள் சமூகத்துடன் அர்த்தமுள்ள வழியில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. ஆகவே, இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில், மாற்று வழிகளை ஆராய்வதற்கும், சுயாதீனமான தேர்வுகளை மேற்கொள்வதற்கும் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இளைஞர்கள் அவர்களது விருப்பமான வழிகாட்டியுடன் பணிபுரிய வாய்ப்பளிப்பதோடு, மாறுபட்ட உலகக் கண்ணோட்டத்தை உருவாக்குகிறது. இந்த முயற்சியில், செயல் சார்ந்த ஆராய்ச்சி, அடிமட்ட இதழியல், சுற்றுச்சூழல் முயற்சிகள், சிறுபான்மை உரிமைகள், பொது சுகாதாரம், காப்பகப்படுத்துதல், அழிந்து வரும் கலைகள், கலாசாரம், மொழி போன்றவை குறித்து அறிக்கை தயாரித்தல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறலாம். ஊக்கத்தொகை எண்ணிக்கை: இத்திட்டத்தில், இரண்டு பிரிவுகளில் 12 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தகுதிகள்:


தற்போது இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.


1. பட்டதாரிகள் - ஜனவரி 1, 1994 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருப்பதோடு, இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


2. அனுபவம் பெற்றவர்கள் - 1 ஜனவரி 1989 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருப்பதோடு, குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தற்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.ஊக்கத்தொகை விபரம்: விண்ணப்பதாரர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து, ஊக்கத்தொகை மாதம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை மாறுபடுகிறது. சிறப்பு திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படலாம். மொத்தம் 2 ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக, தேர்வு செய்யப்படுபவர்கள் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படுவர். தொடர்ந்து, 15 நாட்களுக்குள் தேர்வுக் குழுவால் இறுதி நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக ஊக்கத்தொகைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் விபரம், மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 15, 2024 விபரங்களுக்கு: www.inlaksfoundation.org/inlaks-shivdasani-fellowship-for-social-engagementAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us